நெல் கொள்முதல்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
நெல் கொள்முதல்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-
நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.
மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.
பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.