சபரிமலை அய்யப்பன்கோவில் மேல்சாந்தியாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025
சபரிமலை அய்யப்பன்கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியைச் சேர்ந்த பிரசாத் தேர்வு
பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன்கோயில் மேல்சாந்தியாக சாலக்குடியைச் சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாளிகைபுரம் மேல்சாந்தியாக கொல்லம் பகுதியைச் சேர்ந்த மனு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
14 பேர் கொண்ட பட்டியலில் இருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகளை எடுத்து நடத்துபவராக மேல்சாந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-18 07:24 GMT