ஆஷஸ் டெஸ்ட் சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
ஆஷஸ் டெஸ்ட் சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்த கேரி
ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதம் அடித்ததும் வானத்தை நோக்கி பேட்டை உயர்த்தியபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர், புற்று நோய் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் மறைந்த தனது தந்தை கோர்டானுக்கு சதத்தை அர்ப்பணித்தார்.
பின்னர் அலெக்ஸ் கேரி கூறுகையில், 'தற்போது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு வானத்தை நோக்கி ஏன் பார்த்தேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் கண்ணீர் விடாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. உள்ளூர் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சதம் அடித்தது சிறப்பானதாகும். இந்த சிறப்பான சதத்தை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.
Update: 2025-12-18 03:30 GMT