23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம் - எதற்காக...?
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நடக்கிறது. செங்கோட்டையன், த.வெ.க.வுக்கு சென்றதில் இருந்து அவர் என்னிடம் பேசவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 23-ந்தேதி என் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதுவரை நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-12-18 03:40 GMT