வைகோவுடன் துரை வைகோ நேரில் சந்திப்பு பா.ம.க.வை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
வைகோவுடன் துரை வைகோ நேரில் சந்திப்பு
பா.ம.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வலுத்துள்ளது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று விலகியுள்ளார்.
அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவை அவருடைய மகன் துரை வைகோ நேரில் சந்தித்து பேசினார். அவருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்த நிலையில் அவருடைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Update: 2025-04-19 07:26 GMT