சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் கடலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் கடலில் விழுந்த ஓட்டுநர் முகமது சகி உயிரிழந்தார். கடலுக்குள் மாயமான ஓட்டுநரை நேற்று முதல் தேடி வந்த நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சென்னை துறைமுகத்தில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடற்படை வீரரை அழைத்து செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து கார் கடலில் கவிழ்ந்தது. கொடுங்கையூரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் முகமது சகி என்பவர் காருடன் கடலில் மூழ்கினார். கார் கடலில் மூழ்கிய நிலையில் கண்ணாடியை உடைத்து கடற்படை வீரர் வெளியே வந்து தப்பித்தார்.
Update: 2024-12-19 12:51 GMT