நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு குண்டர் போல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார். அவர் தள்ளியதால், பாஜகவின் மூத்த எம்.பி., விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஐசியூ.,வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் எம்.பி.க்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் பாஜக தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும். நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கார்கேவும், ராகுலும் மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
Update: 2024-12-19 14:10 GMT