கான்வே இரட்டை சதம்: 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

கான்வே இரட்டை சதம்: 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து 


இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நியூசிலாந்து அணி வீரர்கள் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.அந்த அணியில் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

பொறுப்புடன் விளையாடி கான்வே இரட்டை சதமடித்து அசத்தினார். ரச்சின் ரவீந்திரா அரைசதமடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 227 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Update: 2025-12-19 05:34 GMT

Linked news