மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆழ்வார்புரம் பகுதியில் அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டனர். சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறுகிறது.
Update: 2025-04-20 05:50 GMT