சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பா.ஜ.க.வை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-20 11:17 GMT

Linked news