கவர்னர் தபால்காரர் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
கவர்னர் தபால்காரர் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், "ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன; அவர் தபால்காரர் அல்ல" என்று வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல் இழந்துவிட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது. கவர்னரின் விருப்பபடிதான் செயல்படும் என்பதுபோல் ஆகிவிடும்" என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
Update: 2025-08-20 08:18 GMT