நாடாளுமன்ற மக்களவை 3 மணி வரை ஒத்தி வைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
நாடாளுமன்ற மக்களவை 3 மணி வரை ஒத்தி வைப்பு
மக்களவையில் மூன்று மசோதாவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்து உள்ளார்.
எனினும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களை கிழித்து மத்திய மந்திரி அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். இதனால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-08-20 09:30 GMT