தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், “பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு என்பது எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
Update: 2025-03-22 06:51 GMT