இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரில் இறங்கியுள்ளது. அந்நாட்டின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.
ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.
நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.