அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு இந்திய நேரத்தின்படி இன்று காலை டிரம்ப் உரையாற்றினார். அதில், ஈரானில் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவ தாக்குதலை பற்றி பேசியுள்ளார். அப்போது அவருடன், துணை ஜனாதிபதி வான்ஸ், அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்க் ரூபியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அவர் பேசும்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும்.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவத்தினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன என்று பேசியுள்ளார்.

Update: 2025-06-22 03:46 GMT

Linked news