அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.
இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.
Update: 2025-06-22 04:26 GMT