அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, ஈரானிய ஆதரவு பெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.
Update: 2025-06-22 04:32 GMT