ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்: இஸ்ரோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்

டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல சாதனைகளை செய்துள்ளது. பேரிடர் எச்சரிக்கை துறையில் இஸ்ரோ ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் மொத்தம் 13 இலக்குகள் இஸ்ரோவால் ஆதரிக்கப்படுகின்றன.

'கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம். சோதனைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. உள்நாட்டு மயமாக்கலில் பல நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஆதித்யா எல்-1- ஐ பொறுத்தவரை, இந்த ஆண்டு நாங்கள் 13 'டெராபிட்' தரவை வெளியிட்டுள்ளோம்."

முதல் ஆளில்லா விண்கலமான ககன்யான் 1, இந்த ஆண்டு இறுதிக்குள். ஒருவேளை டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும். அதில், அரை மனித உருவமான வியோமித்ரா (ரோபட்) பறக்கப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-08-22 04:54 GMT

Linked news