மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூரில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Update: 2025-08-22 08:23 GMT