தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன் - அமித்ஷா
நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்.
மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பாஜகவிற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சிபி ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.
பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர் மோடி. சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.