அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளிலும், மழைநீர் தேங்கும் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மழை பாதிப்பு குறித்து தொலைபேசியின் மூலம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசி மூலமாக வந்த புகாரை அடுத்து, நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றேன். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அலெர்ட்டாக இருக்கிறோம்” என்று கூறினார்.