சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்த இடங்கள் எவை...?
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. அதன்படி, எண்ணூரில் 12 செ.மீ, மதுரவாயல், நெற்குன்றத்தில் 11 செ.மீ, வடசென்னையில் 10 செ.மீ, வளசரவாக்கம், மணலியில் 9 செ.மீ, வடபழனி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, துரைப்பாக்கம், கொரட்டூர், விம்கோ நகரில் 8 செ.மீ, எம்.ஜி.ஆர். நகர், மத்திய சென்னை, கண்ணகி நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 1,46,950 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
Update: 2025-10-22 06:08 GMT