ஊட்டியில் மலை ரெயில் சேவை 4-வது நாளாக ரத்து ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
ஊட்டியில் மலை ரெயில் சேவை 4-வது நாளாக ரத்து
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. நீலகிரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை ரயில் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று (22.10.25) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, மண் சரிவு காரணமாக ஏற்கனவே கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மழைபெய்து ரயில் பாதைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், நான்காவது நாளாக இன்றும் (22.10.205) மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
Update: 2025-10-22 06:57 GMT