ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், இன்றைய தினம் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2025-10-22 09:29 GMT

Linked news