புயலுக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
புயலுக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை. தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு
மண்டலமாக வலுப் பெறாது . இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-22 10:03 GMT