டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Update: 2025-10-22 10:24 GMT

Linked news