தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மாவட்டங்களில் மழை நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் இயல்பான நீர்வரத்தை விட பல மடங்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு காணப்படுவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குளிக்க அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2025-11-22 05:58 GMT

Linked news