ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை 1 கிலோவுக்கு ரூ.1,500 திடீர் என உயர்ந்து ரூ.4,000 க்கு விற்பனையாகி வருகிறது. மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும் விலை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
Update: 2025-11-22 09:22 GMT