இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்26... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2025-11-22 11:13 GMT

Linked news