வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக வரும் 24ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை சென்னை முழுவதும் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக தினசரி 2 முதல் 10 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் நடைபெறும் இடங்கள் தொடர்பான விவரங்களை http://tnuhdb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில், பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கிரையப் பத்திரம் மற்றும் பட்டா பெற்று பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-23 09:30 GMT