உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி-தமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி-தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் பங்கேற்று பேசிய மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், புதிய உலகின் சவால்களுக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கை வழியே மக்களை நாம் தயார்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

ஏ.ஐ. மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியையும் அவர் வலியுறுத்தி கூறினார்.

Update: 2025-02-23 10:39 GMT

Linked news