ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி குண்டுமழை பொழிந்து கொன்றது.
இந்த தாக்குதல் நடந்து பல மாதங்களானாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நடைபெறாமல் தள்ளி போனது. இந்த சூழலில், லெபனானில் உள்ள மிக பெரிய விளையாட்டு திடலில் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு 5 மாதங்களுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.
இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கடும் குளிரிலும் நடந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
Update: 2025-02-23 11:26 GMT