தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்..? -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்..? - மத்திய அரசு விளக்கம்
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையெழுத்து இடாவிட்டால் நிதி தரமாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னதாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Update: 2025-05-23 12:53 GMT