இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு


இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி. கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை இந்த பதவியில் அவர் நீடித்த நிலையில், அந்த பதவிக்கு புதிதாக ஒருவரை டிரம்ப் நியமித்து உள்ளார்.

இதன்படி, செர்ஜியோ கோர் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் இன்று நியமித்து உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அதிகாரிகளுக்கான அலுவலகத்தின் இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார்.

Update: 2025-08-23 05:20 GMT

Linked news