ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்: இளவேனில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்: இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "2025 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் அற்புதமான சாதனைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமைப்படுத்துகின்றன. இளவேனில் சாதனைகள், எதிர்கால சாம்பியன்களை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-23 07:04 GMT