விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன்
செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ தவெகவின் 2வது மாநில மாநாடு வெற்று கூச்சல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறது. 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்த காலம் வேறு, இப்போதுள்ள காலம் வேறு, 2026 தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது.
அவரது பேச்சில் ஆக்கப்பூர்வமாக எந்த கருத்தும் இல்லை.. கருத்தியலும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக பற்றிய விஜய்யின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அதற்கு அ.தி.மு.க.வினர் தான் பதில் அளிக்க வேண்டும். நான் எம்.ஜி.ஆரை பற்றி பேசிய போது எகிறியவர்கள், இப்போது வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
Update: 2025-08-23 07:55 GMT