காஞ்சீபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

காஞ்சீபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது 


விஜய் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி என்பதால், இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-11-23 06:00 GMT

Linked news