டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இரு கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.

Update: 2025-02-24 11:17 GMT

Linked news