தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.

Update: 2025-02-24 12:33 GMT

Linked news