கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார். அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலை கிராம மக்களின் சிரமங்கள் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை. கோவை - கடமான்கோம்பை பகுதிவாழ் மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கையாக கேட்டு கொண்டார்.
Update: 2025-02-24 13:28 GMT