திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில், மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் என தெரிவித்த நீதிபதிகள், கடவுள்கள் சரியாகதான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் சரியாக இல்லை என்றும் கூறினர்.
Update: 2025-03-24 09:37 GMT