கடலூர், சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

கடலூர், சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பெரிய பந்து போன்ற அந்த பொருளின் மீது மாலத்தீவு என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் காணப்பட்டன. இதனால், கடல் எல்லை பகுதிக்கு பயன்படுத்தப்படும் மிதவை பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2025-03-24 11:03 GMT

Linked news