எம்.பி.க்களின் சம்பளம் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
எம்.பி.க்களின் சம்பளம் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 24 சதவீதம் உயர்த்தி வழங்கப்படவுள்ளது என மத்திய அரசு இன்று அறிவித்து உள்ளது. முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் எம்.பி. ஒருவர் இனி, ரூ.1.24 லட்சம் சம்பள தொகையாக பெறுவார்.
அவருடைய தினப்படி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதேபோன்று, முன்னாள் எம்.பி.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
Update: 2025-03-24 13:49 GMT