பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ந்தேதி முதலில் இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். இந்த சூழலில், பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிரான தடையை மே 23-ந்தேதி வரை முதலில் மத்திய அரசு நீட்டித்தது.
இதன்பின்னர் இந்த தடை ஜூன் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை இன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், ஜூலை 24-ந்தேதி வரையிலான ஒரு மாதத்திற்கு, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மத்திய அரசு தடையை நீட்டித்து அறிவித்து உள்ளது.
இதேபோன்றதொரு தடையை பாகிஸ்தான் அரசும் விதித்து, கடைப்பிடித்து வருகிறது. இதன்படி, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த முடியாத வகையில், அந்நாடு ஜூலை 24-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு தடையை நீட்டித்துள்ளது.