கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தடையால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Update: 2025-06-24 05:08 GMT

Linked news