என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வருத்தம்
நீரஜ் சோப்ரா கூறுகையில், “எனது நாடும் அதன் நலன்களும் எப்போதும் எனக்கு முக்கியம். தங்கள் உறவுகளை இழந்து தவிப்பவர்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. ஒட்டுமொத்த தேசத்தோடு சேர்ந்து, நடந்ததை நினைத்து நான் வேதனையும் கோபமும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் பதில் ஒரு தேசமாக நமது வலிமையைக் காண்பிக்கும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
நான் பல ஆண்டுகளாக என் நாட்டை பெருமையுடன் சுமந்து வருகிறேன், அதனால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. எந்த நல்ல காரணமும் இல்லாமல், என்னையும் என் குடும்பத்தையும் குறிவைப்பவர்களுக்கு நான் என்னை விளக்க வேண்டியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
Update: 2025-04-25 10:43 GMT