ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு

ஊட்டி, கொடைக்கானலில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என்று ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனவா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-04-25 12:47 GMT

Linked news