கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025
கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-25 06:03 GMT