டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025
டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கியுள்ளன. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்கின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. சாணக்யபுரி, ஐ.டி.ஓ. மற்றும் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
Update: 2025-05-25 06:29 GMT