கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மறுசீரமைப்பு - பசுமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மறுசீரமைப்பு - பசுமை பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அனுமதி
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள பழைய கழிவுகளை அகற்றி நிலத்தை மீட்கும் பெரும் திட்டத்திற்கு நிதி திரட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் வெளியிட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாக துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஸ்வச்பாரத் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.646.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பங்கான 59 சதவீத நிதியைத் திரட்ட பசுமை பத்திரங்கள் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
Update: 2025-11-25 05:26 GMT